இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பு இருக்கலாமா?




1. இன்சுலின் என்றால் என்ன?


2. இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?


3. இன்சுலின் எதிர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன?


4. ரமலான் நோன்பு


5. இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் நல்லதா?


6. இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள்


7. மிகவும் கடுமையான நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும் சாத்தியகூறு என்ன?


8. கிளைசெமிக் அமைப்பு என்றால் என்ன?


9. இன்சுலின் எதிர்ப்பு குணமாகக்கூடியதா?


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் "இன்சுலின் எதிர்ப்பு" பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அல்லது உணவுமுறைகள் இருப்பதாகக்கூறும் புத்தகங்கள் வெளியாகின்றன. இது பற்றிய வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

·இன்சுலின் எதிர்ப்பு’ வகை 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட கடுமையான மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தச்சொல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்சுலின் எதிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன? இதை சரி செய்ய முடியுமா? சாப்பிடாமல் இருப்பது அதாவது ஃபாஸ்டிங் அதை கட்டுப்படுத்த உதவுமா?


இன்சுலின் என்றால் என்ன?

கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் மனித உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும்.

ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. உடலில் அதை சேமித்து சக்திக்காக பயன்படுத்த அது அனுமதிக்கிறது.

கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடலில் இன்சுலின் பின்வரும் வழிகளில் செயல்படுகிறது:

*  உடல் நீங்கள் உண்ணும் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் முதன்மை ஆதாரமாக கருதப்படுகிறது.

*  குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் நகர்கிறது, மேலும் இன்சுலின் வெளியிட கணையத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.

*  ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்குள் நுழைய இன்சுலின் உதவுகிறது. இதனால் அது ஆற்றலுக்காக பயன்படுத்தப்படலாம் அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக அது சேமிக்கப்படும்.

*  குளுக்கோஸ் உடல் செல்களுக்குள் நுழைந்து, ரத்தத்தில் அதன் அளவு குறையும் போது, இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அது கணையத்திற்கு சமிக்ஞை செய்கிறது.


இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?

இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள், இன்சுலினுக்கு ஏற்றவாறு செயல்படாமல் இருக்கும்போது ஏற்படும்.

இது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது.

கணையம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸின் அளவை அகற்ற அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஹைப்பர் இன்சுலினீமியா என அழைக்கப்படுகிறது.

பலவீனமான செல் செயல்பாட்டை ஈடுசெய்ய கணையம் போதுமான இன்சுலினை சுரக்கும் வரை, ரத்த சர்க்கரை அளவு ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும்.

இருப்பினும் இன்சுலினுக்கான செல் எதிர்ப்பு அதிகரித்தால், அது உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு வழிவகுக்கிறது. இது காலப்போக்கில் வகை 2 நீரிழிவு மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.


இன்சுலின் எதிர்ப்பு என்பது "மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படும் ஒரு சிக்கலான நிலை" சரியான காரணம் நபருக்கு நபர் மாறுபடலாம்.


இன்சுலின் எதிர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன?

*  உடல் பருமன்: அதிகப்படியான உடல் கொழுப்பு, குறிப்பாக வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்பை உடையது.

*  உடல் உழைப்பின்மை: வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும்.

*  மரபியல்: சிலர் மரபணு ரீதியாக இன்சுலின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். மோசமான உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்த உணவு இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். இந்த உணவுகள் ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.

*  நாள்பட்ட மன அழுத்தம்: கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினின் திறனில் தலையிடலாம். இன்சுலின் எதிர்ப்பிற்கு இதுவும் பங்களிக்கிறது.

*  தூக்கமின்மை: தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம், இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை பாதிக்கும். தூக்கமின்மையானது ஹார்மோன் அளவை சீர்குலைத்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.

*  சில மருத்துவ நிலைமைகள்: பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்), குஷிங்ஸ் சிண்ட்ரோம் மற்றும் ஃபேட்டி லிவர் நோய் போன்ற நிலைமைகள் இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

*  முதுமை: வயதாகும்போது செல்கள் இன்சுலினின் சொல்படி கேட்பது குறையும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.


ரமலான் நோன்பு

ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

"நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் நீரிழிவு சிகிச்சை மருத்துவ குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே நோன்பு பற்றி முடிவுசெய்ய வேண்டும்


உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே இன்சுலின் சென்ஸிடிவிட்டியை மேம்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன கூடுதலாக உண்ணா நோன்பு காலங்களில் சில நபர்களுக்கு எடை இழப்பு அல்லது உடல் கொழுப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் குறிப்பாக பருமனான நபர்களில்

இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்.


இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் மீது ரமலான் நோன்பின் விளைவு, வயது, பாலினம், ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகள், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு அளவுகள் போன்ற காரணிகளைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும் ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். நோன்பு காலத்தில் பாதுகாப்பான உண்ணாவிரத நடைமுறைகள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையை உறுதி செய்வது முக்கியம். சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை அவர்கள் பெறவேண்டும்."

" உடல்நல நன்மைகளை அதிகரிக்க, இண்டர்மிடெண்ட் (இடைப்பட்ட) ஃபாஸ்டிங் அல்லது முழு ஃபாஸ்டிங்கின் போது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்


இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் நல்லதா?

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது, பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

பகலில் நீண்ட நேரம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, உணவுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும்.


இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்கால் வளர்சிதை மாற்ற நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்ட எந்த டயட்டும் நோயாளியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த வகையான உணவு அல்லது உண்ணாவிரதத்திலும், "நீண்ட கால நிலைத்தன்மையை" அவர் கோடிட்டுக்காட்டுகிறார்.

"உங்கள் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்ய முடியுமா?.நீங்கள் 15 பவுண்டுகளை இழக்க விரும்பலாம். ஆனால் நீங்கள் டயட்டிங்கை நிறுத்தினால் அது ஆவேசத்துடன் திரும்பி வரும்."

இந்த வகை டயட் பற்றிய ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து வருகிறது என்றாலும் இது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை மாற்றாமல் உடல் பருமன் இல்லாதவர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது என்பதை 2015 இல் செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது."

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இது மேம்பட்ட இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது.


இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள்

இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது.

இருப்பினும், இன்சுலின் எதிர்ப்பு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன.

பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் (குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி), உயர் ரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடு அளவுகள் (கொழுப்பின் மோசமான வடிவம்), குறைந்த HDL கொழுப்பு ( நல்ல வடிவம்), மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்


இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தினால் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தால் அந்த நபருக்கு மற்ற அறிகுறிகள் ஏற்படலாம் கூறுகிறார்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும்.

இந்த அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் இன்சுலின் எதிர்ப்பு உள்ள அனைவருக்கும் இந்த எல்லா அறிகுறிகளும் இருக்காது என்று என்று அவர் வலியுறுத்துகிறார்.

"கூடுதலாக, இந்த அறிகுறிகள் மற்ற சுகாதார நிலைமைகளையும் குறிக்கலாம், எனவே சரியான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்க இன்சுலின் எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேலாண்மை முக்கியம்"


மிகவும் கடுமையான நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும் சாத்தியகூறு என்ன?

இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் அல்லது நிர்வகிக்கப்படாவிட்டால் அவர்களில் சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன ஆனால் இது மரபியல், உடல் பருமன், உடல் செயல் தன்மை, உணவு, வயது மற்றும் இனம் போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது.”

"சில இனக்குழுக்கள் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு காகசியர்களை ஒப்பிடும்போது வகை 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது


கிளைசெமிக் அமைப்பு என்றால் என்ன?

கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உணவுகளை வகைப்படுத்த பயன்படும் ஒரு அமைப்பாகும். நாம் உண்ணும் உணவு ரத்த சர்க்கரையின் அளவை, விரைவாகவோ, மிதமாகவோ அல்லது மெதுவாகவோ அதிகரிக்கச் செய்கிறது என்பதை இது காட்டுகிறது.

மெதுவாக உடைபடும் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில காய்கறிகள், பழங்கள், இனிப்பு சேர்க்காத பால், பருப்பு வகைகள், முழு தானிய ரொட்டி மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கும். மறுபுறம், சர்க்கரை, சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள், வெள்ளை உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை அரிசி ஆகியவை உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள். இது ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாகிறது.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட உணவு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க கிளைசெமிக் குறியீடு மட்டும் போதாது என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, பெரும்பாலான சாக்லேட் வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகம்.அதே நேரம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை அல்ல. எடுத்துக்காட்டாக, தர்பூசணி போன்ற சில பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை நன்மை தரக்கூடியவை. எனவே, உணவு ஆரோக்கியமானதாகவும், சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


இன்சுலின் எதிர்ப்பு குணமாகக்கூடியதா?

"வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகளின் மூலம் இன்சுலின் எதிர்ப்பை பெரும்பாலும்

மாற்றியமைக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் கணிசமாக மேம்படுத்த முடியும்"இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். கூடவே மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்." என்று ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் குறிப்பிட்டார். ஜோசப் மற்றும் அல்-அப்தாலத் இருவரும் வழங்கிய இரண்டாவது அறிவுரை, வழக்கமான உடற்பயிற்சியை பராமரிக்க வேண்டும் என்பதுதான். எடையை குறைப்பது, குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்தலாம்.

நாள்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதும் முக்கியமானது என்று பேராசிரியர் ஜோசப் கூறுகிறார். "தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது நன்மை பயக்கும், போதுமான அளவு தூங்குவதும் மிகவும் முக்கியம்.

இறுதியாக, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன.

மருந்து உதவுமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்

Post a Comment

Previous Post Next Post