நமது உடலின் அனைத்து
செயல்பாடுகளுக்கும் ரத்தம்
இன்றியமையாதது. எனவே அத்தகைய
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
தவறும் பட்சத்தில் உடலில் நச்சுக்களின்
அளவு அதிகரித்து, உடலின்
உறுப்புக்கள் அனைத்தும்
விரைவிலேயே செயல் இழக்க
ஆரம்பிக்கும்.
இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள்
இரத்தத்தில் இருந்தால் தான், உடல் அசதி,
வயிற்றுப் பொருமல், சுவாசக்
கோளறுகள், அலர்ஜி, நோயெதிர்ப்பு
சக்தி குறைபாடு, தொடர்ச்சியான
தலை வலி போன்றவை ஏற்படும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தம்
விருத்தியடைய :
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால்
புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை
வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
வெட்டை சூடு தீர்ந்து இரத்தம்
விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம்
பருப்புடன் சமைத்து ஒரு
கோழிமுட்டை உடைத்து விட்டு
கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள்
சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட
இரத்தம் விருத்தி ஆகிறது.
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
உதவும் இயற்க்கை உணவுகள் :
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து
சாப்பிட்டால் இரத்தம்
சுத்தப்படுத்தப்படுகிறது.
வாரத்திற்கு 2-3 முறை ஒரு டம்ளர்
முட்டைகோஸ் ஜூஸை குடித்து
வந்தால், உடலில் உள்ள இரத்தமானது
சுத்தமாகும்.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட
இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத
நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை
சுத்தம் செய்வது மட்டுமில்லாமல்,
சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
வாரத்திற்கு இரண்டு முறை
காலையில் எழுந்ததும் வெறும்
வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில்
போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை
பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள்
மட்டுமின்றி, கிருமிகளும்
அழிந்துவிடும்
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில்
உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக
இருக்கும் என்று சொல்வார்களே, அது
ஏன் என்று தெரியுமா? ஏனெனில்
கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள
நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்
என்பதால் தான்