நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட 8 ஆவது குருபீடாதிபதி வணக்கத்திற்குரிய ஸ்ரீ வேதவித்தியாசாகரர் சுவாமிகள் திருமுன்னிலை வகிக்க, தெல்லிப்பளை, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ து.ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இத்திருக்கூட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நல்லூர், பிரதேச செயலாளர், திருமதி. யசோதா உதயகுமார் அவர்கள், பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, யாழ்ப்பாணம், தேசிய கல்வியியற் கல்லூரி, சிரேஷ்ட விரிவுரையாளர், திரு. மகாலிங்கம் நிரேஷ்குமார் அவர்கள் சிறப்பதிதியாகவும் கௌரவ அதிதிகளாக நல்லூர், யா/மங்கையர்க்கரசி வித்தியாலய அதிபர், திரு. ஆறுமுகராசா பாலச்சந்திரன் அவர்கள், நல்லூர், சங்கிலியன் மன்றத் தலைவர் திரு. இராமலிங்கம் சந்திரகுமார் அவர்கள், நல்லூர், சைவ வித்தியா விருத்திச் சங்கத் தலைவர் திரு. சு.சத்தியேந்திரன் அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
கலை நிகழ்வுகளை நல்லூர், சைவ வித்தியா விருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மாணவர்களும் வரவேற்புரையினை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ர. நகுலா அவர்களும் சிறப்பு நிகழ்வாக ,“லலிதகலாவேதி” திருநாவுக்கரசு லவணியன் அவர்கள் வழங்கும் இசைக் கச்சேரி நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து நன்றியுரையினை நல்லூர், சைவ வித்தியா விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி. சஞ்சிகா சந்திரகாந்தன் அவர்கள் வழங்கவுள்ளார்கள். இந்நிகழ்வினைக் கண்டுகளிக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
பணிப்பாளர்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்