இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறவற
நூற்றண்டு நிறைவைக் கொண்டாடு முகமாக யாழ். மாவட்டத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி
விபுலாநந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு ஒன்றினை அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடாத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது எதிர்வரும் 19.07.2025 சனிக்கிழமை காலை மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் சுவாமி விபுலாநந்தர் திருவுருவப்படத்திற்கு விஷேட பூஜை வழிபாடு இடம்பெற்று, மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஊர்தி மற்றும் நடை பவனியுடன் சுவாமி விபுலானந்தர் திருவுருவப்படம் ஊர்வலமாக யா/ மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு எடுத்து வரப்படும். மானிப்பாய் இந்தக் கல்லூரியில் காலை நிகழ்வாக "முத்தமிழ் அரங்கும் ", மாலை நிகழ்வாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் " இசை அரங்கும் " இரண்டாம் நாள் 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் " ஆய்வரங்கும் " மாலை நிகழ்வாக " நாடக அரங்கும் " நடைபெறவுள்ளது. அத்துடன் 19.07.2025 தொடக்கம் ஒரு வாரகாலம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில், விபுலாநந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புத்தகக்கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.
திரு.
ய. அநிருத்தனன்
பணிப்பாளர்
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்