இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 22.08.2025 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00 மணிக்கு " தெய்வீகக் கலை அர்ச்சனை " நிகழ்வு இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 31.07.2025 வியாழக்கிழமை அராலி கிழக்கு மலையாளங் காட்டு ஜயனார் பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்வும் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஶ்ரீல ஶ்ரீ ஆறுமுகநாவலர் கற்கைநெறிப் புராணபடன மாணவர்கள் செல்வி் ஈ். நவிஷா மற்றும் திருமதி் சோ. நிரஞ்சனாஆகியோர்களின் பராண படனமும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் கலத்து கொள்ளுமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அறிவித்துள்ளார்.
தொடர் தெய்வீகத் திருக்கூட்ட நிகழ்வில் 06 ம் நாள் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்.