ஆரோக்கிய வாழ்வில் ஒருங்கிசைவினை ஏற்படுத்தி மனிதமேம்பாட்டிற்கு வித்திடும் யோகக்கலை!


இந்தியப் பெருங்கலைகளுள் பழம்பெரும் கலையாக போற்றப்படும் யோகக்கலையானது தற்போது உலகெங்கும் பிரசித்தம் பெற்றுவருகின்ற கலையாக நோக்கப்படுகிறது. நவீனத்துவம் எனும் பீடிகையுடன் பழமையை புறமொதுக்கி புதுமைக்கும் மாற்றங்களுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டு வருகின்ற தற்காலத்தில் பழமை குன்றாது நோய் குணப்படுத்தும் தன்மையில் காத்திரமான இடத்தினை இக்கலை பெற்று வருகின்றது. நவீன மருத்துவத்துறையை விஞ்சுமளவிற்கு உடல், உள ரீதியான குணமாக்க கடினமான அல்லது சவால் நிறைந்த பல்வேறு நோய்களை பக்கவிளைவுகளின்றி குணப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டிருப்பதனால் தேசம் கடந்து மேலை நாட்டவர்களும் கூட இக்கலையால் ஈர்க்கப்பட்டு ஆர்வத்துடன் பயின்;றொழுகிவருகின்றமை கண்கூடு. காலத்தின் அசைவுகள் மனிதனது எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் நடத்தைகளிலும் பிரதிபலித்து வருகின்றன. மனித வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்கப்பட முடியாதவை. இருந்தபோதும் மாற்றங்கள் எனும் பெயரில் மனித வாழ்வியல் விழுமியங்களை கருவறுக்கும் செயற்பாடுகள் முனைப்புக் கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு முனைப்புக் கொண்;டால் உடல், உள, சமூக, சூழல், ஆன்மிக ரீதியான பல்வேறு எதிர்மறையான விளைவுகளையும் அறுவடை செய்ய வேண்டும் என்ற நிதர்சனமும் உணர்தற்குரியது. இத்தகைய பின்னணியில் தான் தற்காலத்தில் அதிகரித்துவருகின்ற நோய்த்தாக்கங்களானவை மக்களின் நாளாந்த வாழ்வியல் நகர்வுகளை பாதித்து ஆயுளையும் சுருக்கி வருவதனை காணமுடிகின்றது. எவ்வளவுதான் மருத்துவ விஞ்ஞானம் நாளுக்குநாள் முன்னேற்றம் கண்டு நோய்த்தாக்கங்களுக்கு பரிகாரம் தேடி நிவர்த்திக்க முற்பட்டாலும் அவை புதுப்புது வடிவில் சன்னதம் கொண்டு மனிதனை தாக்குகின்றனவேயொழிய அவற்றின் தாக்கம் குறைந்தபாடாக தெரியவில்லை. இதற்கு நமது வாழ்வியற் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவினை பிரதானத்துவப்படுத்திக் கூறலாம். இந்நிலையில், ஒருவன் எப்படியும் வாழலாம் என்று தான்தோன்றித்தனமாக வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று கோடு போட்டு வாழும் விதத்தை நமக்குச் சொல்லித்தரும் கலையாக திகழ்கின்றது. இஃது இந்துத்துவம் சார் பின்னணியை கொண்டெழுந்தாலும் அதன் அடிப்படைக்கொள்கைகளானவை பெரும்பாலும் மதச்சார்பின்றி, மனித வாழ்வியலின் ஆழ்ந்த தத்துவ உட்பொருட்களை உள்ளடக்கியுள்ளமையை நவீன விஞ்ஞானமே வியப்புடன் ஏற்றுக்கொள்கின்றது. இக்கலையானது பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலிருந்து உடல், உள கட்டமைப்பை சீராக பேணுதல் வரை எவ்வாறான வகிபங்கினை  கொண்டுள்ளதென்பதனை சுருக்கமாக நோக்கலாம்.

   ஆரோக்கியம் என்ற எண்ணக்கரு பல் பரிமாணமுடையதாக விளங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் என்ற சர்வதேச அமைப்பு, 'ஆரோக்கியம்' என்பதற்கு உடல், உளம், சமூகம், சூழல், ஆன்மிகம் ஆகிய நிலைகளில் நன்நிலையை அடைதல் என வரைவிலக்கணப்படுத்துகிறது. இவ் ஐந்து நிலைகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பர தொடர்புடைய அகச்சார்புடையவையாகும். ஒன்றில் ஏற்படும் பாதிப்பானது ஏனையவற்றிலும் தாக்கம் செலுத்தும் தன்மையவை. இவற்றிற்கிடையே ஒருமைத்தன்மையான - கூட்டிணைந்ததான அணுகுமுறையை (ர்ழடளைவiஉ யுppசழயஉh) ஏற்படுத்தினாலேயே மனித வாழ்வு பூரணத்துவமுடையதாக விளங்கும். இதற்கான உன்னதமான கருவியாக யோகம் நோக்கப்படுகிறது. பொதுவாக யோகமானது ஆழ்ந்தகன்ற பொருட்தத்துவத்தை எமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. 'யுஜ்' எனும் வினையடியினின்று பிறந்த இச்சொற்பதம் குறித்துநிற்கும் பொருளை நோக்கின், 'இணைத்தல்' அல்லது 'ஒன்றுசேர்த்தல்' என்ற நேரடி அர்த்தம் கொண்டு, நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று முக்கிய பொருட்களின் இயக்கப்பாடுகளையும் ஒன்றிணைத்து மனித வாழ்வியற் சமன்பாட்டிற்கு வித்திடும் அறிவியற்கலையாக விளங்குகிறது. இதனை இன்னொருவிதமாகக் கூறும்போது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான ஓழுக்கநெறிகளை- வாழ்வியல் ரீதியான விடயங்களை போதிக்கும் துறை இதுவாகும். இந்து தத்துவ நூல்களெல்லாம் ஆன்மா நிறை நிலையுற்று முக்திப்பேறடைவதையே குறிக்கோளாக கொண்டிலங்குகின்றன. அதற்கான வழியாக யோகத்தையே சுட்டியுரைக்கின்றன. யோக நிலைகளை அடைவதற்கு உடல், உள ஆரோக்கியம் என்பது முக்கியமாக கொள்ளப்படுகின்றன. இதன்படி பார்க்கும்போது ஆரோக்கியம் என்ற எண்ணக்கருவில் உள்ளடக்கப்பட்டுள்ள இவ் ஐந்து நிலைகளின் இயக்கங்களை ஒன்றிணைத்து அவற்றிற்கிடையே ஒரு பொதுமைத்தன்மையை காணுகின்ற புனிதமானதொரு கலையாக கட்டமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மனிதனின் உடல், உளக் கட்டமைப்பை கூர்ந்து நோக்கின் அவை பல சிக்கலான பொறிமுறைகளை கொண்டுள்ளன என்பது புலனாகும். அவற்றினை மிக ஆழமாக  அறிந்து கொள்ள முற்படுவது நம் சிற்றறிவின் பாற்பட்டதாகும். 


எமது உடலானது அமைப்பு ரீதியாக ஒன்பது மண்டலங்களாக- தொகுதிகளாக (ளுலளவநஅள) பிரிக்கப்படுகின்ற அதேவேளை, தொழிற்பாட்டு ரீதியிலும்; இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இடைத்தொடர்புள்ளவையாகவும் காணப்படுகின்றன. அவை, இரத்த ஓட்ட மண்டலம் (ஊசைஉரடயவழசல ளுலளவநஅ)இ சமிபாட்டு மண்டலம் (னுபைநளவiஎந ளுலளவநஅ)இ  இனப்பெருக்க மண்டலம் (சுநிசழனரஉவiஎந ளுலளவநஅ)இ அகஞ்சுரக்கும் மண்டலம் (நுனெழஉசiநெ ளுலளவநஅ)இ சுவாச மண்டலம் (சுநளிசையவழசல ளுலளவநஅ)இ  நிணநீர் மண்டலம் (டுலஅphயவiஉ ளுலளவநஅ)இ  கழிவகற்றும் மண்டலம் (நுஒஉசநவழசல ளுலளவநஅ)இ  நரம்பு மண்டலம் (நேசஎழரள ளுலளவநஅ) மற்றும் எலும்புதசை மண்டலம் (ஆரளஉரடழளமநடநவயட ளுலளவநஅ) என ஒன்பது பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடலில் முக்கியமாக ஐந்து உறுப்புக்கள் காத்திரத்தன்மை பொருந்தியவையாக விளங்குகின்றன. மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல்கள் மற்றும் சிறுநீரகங்கள்; என்பவையே அவையாகும்.  ஏனையவை துணை உறுப்புகளாக அமைகின்றன. உடலியற்செயற்பாடானது சங்கிலித்தொடர் போன்றது. ஒரு மண்டலத்திலோ அல்லது ஏதேனும் உறுப்பு ஒன்றிலோ ஏற்படும் பாதிப்பு ஏனையவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையாகும். இன்றைய காலகட்டத்தில் வேகமெடுத்துவருகின்ற பல்வேறு தொற்றா நோய்களிற்கு, தவறான உணவுப்பழக்கங்கள், இயற்கைக்கு முரணான வாழ்வியல் நடவடிக்கைகள், உடலுழைப்பின்மை, ஓய்வின்மை, தீய பழக்கங்கள் முதலியவை முகாந்திரங்களாக அமைவதுடன் ஆரோக்கியத்திற்கும் வேட்டு வைக்கின்றன. ஆசனப்பயிற்சிகள் மூலம் உடலின் தொடர்புடைய பகுதிகளுக்கு அதிகமான இரத்தோட்டம் மற்றும் தேவையானளவு பிராணசக்தியும் கிடைப்பதனால்; அனுசேபத்தொழிற்பாடுகள் (ஆநவயடிழடளைஅ) சிறப்பான முறையில் நடைபெறுகின்றன. எனவே உடலிலுள்ள மிகச்சிறிய அலகாகிய கலங்களிலிருந்து இழையங்கள், அங்கங்கள் மற்றும் தொகுதிகள் வரையான எல்லா அமைப்பு ரீதியிலான குறைகளையெல்லாம் சீர்செய்து அவற்றின் ஒழுங்கான - வினைத்திறனான இயக்கப்பாட்டினை உறுதிப்படுத்த வல்ல நித்திய சிரஞ்சீவியாக இக்கலை மிளிர்கிறது. 

   தற்காலத்தில் சமூகத்தின் மத்தியில் உளத் தாக்கங்கள்; அதிகரித்துவருகின்றமை பற்றி இன்று பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக உள நெருக்கீடுகள் (ளுவசநளள)இ மன அழுத்தம் (னுநிசநளளழைn)இ பதகளிப்பு (யுnஒநைவல)  என்பவற்றால்  பாதிக்கப்படுவோர் தொகை சடுதியாக அதிகரித்து வருகின்றமை நோக்கத்தக்கது. இதற்கான முதன்மைக் காரணம், நமது வாழ்வியல் கோலங்களில் ஏற்பட்ட மாற்றங்களேயாம். உளப்பாதிப்புக்களானவை பல்வேறு மாற்றற்கடினமான பாரிய உள நோய்களையும் (ஆநவெயட: Pளலஉhழளளைஇ ளுஉhணைழிhசநnயைஇ டீipழடயச னுளைழசனநசஇ னுநஅநவெயைஇ வுசயரஅயஇ Phழடியைளஇ ழுடிளநளளiஎந ஊழஅpரடளiஎந னுளைழசனநசஇ Pயniஉ) உடலியற்பாதிப்புகளையும் (Phலளiஉயட: யுசவாசவைளைஇ யுளவாஅயஇ ஊயnஉநசஇ னுயைடிநவநளஇ ர்நயசவ னளைநயளநளஇ கயவபைரநஇ pயiளெஇ hநயனயஉhநஇ னபைநளவiஎந pசழடிடநஅளஇ டழளள ழக நநெசபலஇ உhயபெநள in யிpநவவைநஇ றநiபாவ டழளள ழச பயin)  ஏற்படுத்துவதுடன் ஆயுளையும் சுருக்கி விடுகின்றன. மேலும் உளத்தொழிற்பாட்டின் கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளை நோக்கின், மன நிலைகள் (ஆழழன: யபெநசஇ யபபசநளளiஎநநௌளஇ சைசவையடிடைவைலஇ யnஒழைரளநௌளஇ சநளவடநளளநௌளஇ அழழன ளறiபௌஇ உசலiபெ)  நித்திரை நிலை (ளுடநநி: iளெழஅnயைஇ சநளவடநளள ளடநநிஇ நஒஉநளளiஎந ளடநநிiநௌள)  உணர்வுசார் நிலைகள் (நுஅழவழையெட: கநநடiபெ நஅpவலஇ ளயனஇ hழிநடநளளஇ யnஒழைரள கநநடiபௌ ழக inஉழஅpநவநnஉந) நடத்தைசார் நிலைகள்; (டீநாயஎழைசயட: டழளள ழக iவெநசநளவஇ கநநடiபெ வசைநன நயளடைலஇ வாழரபாவள ழக ளரiஉனைநஇ னசiமெiபெ நஒஉநளளiஎநடலஇ ரளiபெ னசரபளஇ நபெயபiபெ in hiபா-சளைம யஉவiஎவைநைள)  சிந்தனைசார் நிலைகள் (ஊழபnவைiஎந: iயெடிடைவைல வழ உழnஉநவெசயவநஇ னகைகiஉரடவல உழஅpடநவiபெ வயளமளஇ வாiமெiபெ ழச வயடமiபெ அழசந ளடழறடல)  மற்றும் பாலியல்சார் பிறழ்வுகள் (ளுநஒரயட: சநனரஉநன ளநஒரயட னநளசைநஇ டயஉம ழக ளநஒரயட pநசகழசஅயnஉந) மேற்கூறப்பட்ட நிலைகளில் மேற்கிளம்புகின்ற தாக்கங்களானவை மனிதனது உளவுரணைச் சிதைத்து எதிர்கால வாழ்வையே சூனியமாக்குகின்றன. மனமானது கிளர்ச்சி நிலையிலிருக்கையில் மனதில் எண்ண அலைகள் அதிகரித்து, சுவாச வேகமும் அதிகரிக்கும். யோகத்திலுள்ள பிராணாயாமம் மற்றும் தியானப்பயிற்சிகள், சுவாசத்தை ஆழமாக்கி எண்ண அலைகளை குறைத்து தெளிவான - அமைதியான மனநிலையை உருவாக்குகின்றன.


    எனவே, ஒருவர் உடல், உள, நடத்தை ரீதியாக நன்நிலையிலிருக்கும் போதே அவர் ஆன்மிக நிலையிலும் சிறந்த நிலையை அடையலாம். ஆன்மிகமானது ஆன்மா சம்பந்தப்பட்டது. மனித வாழ்க்கை முழுமை பெறுவதற்கு ஆன்மிகப் பண்புகளை வளர்க்க வேண்டியது முக்கியமானதாகும். இதற்கு நம் முன்னோர்களான சித்தர்கள், யோகிகள் வகுத்துரைத்த சீரிய வாழ்வியல் நெறிநின்று அதாவது ஏனைய யோக முறைகளுக்கெல்லாம் தலையாயதாக திகழும் இராஜயோகம் வலியுறுத்துகின்ற முக்கிய விடயப்பரப்பாகிய அட்டாங்க யோகம் எனும் எட்டுவகையான வாழ்வியற் படிமுறைகளை - வரையறுத்துரைக்கப்பட்ட பயிற்சி முறைகளை தக்க குரு மூலமாக கிரமமாகக் கடைப்பிடித்து ஒழுகினால் வாழ்வின் பூரணத்துவமான நிலையை எய்த முடியும் என்ற கருத்தியல் இராஜ யோகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இத்துணை சிறப்பு வாய்ந்த நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமுடைய இக்கலையை பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கும் அளிப்பதற்கு அனைவரும் ஈடுபட்டுழைக்க வேண்டியது அவசியமாகும்.


ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர்)

Post a Comment

Previous Post Next Post