சக்கரங்களும் மனித வாழ்க்கையும்


இந்த ஆறு சக்கரங்களும், வாழ்வின் ஆறு விதமான தீவிரத்தன்மைகள். இதில் பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுவில் சக்தி நிலை தூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே; அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர். ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை.

வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார். சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது.

ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல. ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி. மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும்.மனிதன் தன்னை உணர்ந்த நிலையில் தன்னை உடல் வேறு ஆன்மா வேறாக உணர்கிறான். அப்பொழுதே ஒரு மனிதன் சித்தனாகும் தகுதி பெறுகிறான்.


ஆதார சக்கரங்களின் தத்துவம்

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள். மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான்.

அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக கருணையாக  வெளிப்படும். ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதார சக்கரங்களும் சஹஸ்ரஹாரம் என்ற தளத்துடன் சேர்ந்து 7 ஆக உயிர் சக்தி மையங்களாக இருக்கின்றன.


(01)
மூலாதாரம்

    மண்  -  கால் எலும்புகள் இரண்டும், கதிரெலும்பும் கூடும் ஆண்குறி என்ற மர்மஸ்தானத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலினி வட்டமாய் வட்டத்திற்குள் 4 இதழ்களுக்குள்ள ஒரு மலர் வட்டமாய் கடம்பம் பூ போல அமைந்து இருக்கும். இது மூலாதாரம் என்று பெயர்.

 இதன் நடுவில் பிரணவ ஒங்கார எழுத்து ஒலி ஒலிக்கும். நான்கு இதழ்களில் ",,ஸ்ரீ, " எழுத்து ஒலிக்கும்.

எண்டோக்கான் சுரப்பி  அதாவது சிறுநீரகம், மூத்திரைப்பை, முதுகுத் தண்டு இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிழமை : செவ்வாய் கிழமை

நிறம் - சிவப்பு

தன்மை : மூலாதார சக்கரம் 

பலவீனமாக இருந்தால்  எதிலும் நாட்டம் இருக்காது. உடம்பில் சக்தி அற்ற நிலை உண்டாகும். செய்யும் தொழில் தவறுகள் ஏற்படும். மன தடுமாற்றம், பயம், சிற்றின்ப குறைபாடு, கருப்பப்பை கோளறு, மக்கள் பேருண்மை போன்றவை  காணப்படும்.

மூலாதார சக்கரத்தை முறையாக செயல்பட செய்தால் மேற்கொண்ட குறைபாடுகளை சரி செய்யலாம்.

சிவப்பு நிறம் அதிக அளவில் பயன்படுத்தவும்

தெளிவுரை:

    மூலாதாரம்  என்பது  மூலம் + ஆதாரம். மூலம் = உற்பத்தி ஆதாரம் = இடம். உற்பத்தியான இடம். அது அதன் உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கிய போது மனதிற்கு ஒன்றும் தெரிவதில்லை. அது மனதிற்கு சொப்பனம் ஆகிறது. அகங்காரம் சொந்த ஸ்தானத்தில் சேர்த்தபோது மனதிற்கு வெளியிலுள்ள யாதொன்றையும் சங்கற்பிக்கவோ அறியவோ, நிதனிக்கவோ, முடிவதில்லை. ஸ்தாபிகவோ, அறியவோ, நிதானிக்கவோ செய்வதற்கு எல்லாம் அகங்காரம் இருந்தால் தான் முடியும். ஆகவே அகங்காரம் தான் உற்பத்தி ஸ்தானமான மனதில் போய் சேர்கின்ற இடம்.


(02)
சுவாதிஷ்டானம்

    நீர் தத்துவம். மூலாதாரத்திற்கு 2 விரற்கட்டை மேல் உள்ளது. இது 6 இதழ் கமலம். நாற்சதுரம். அச்சதுரத்துள் நடுவே 6 இதழ் கமலம். இதன் நடுவில் -"" ஆறு இதழ்களில் "3, 4, , , , எழுத்து ஒலிக்கும்.

எண்டோக்கரான் சுரப்பி ஆணின் விதைகள்- உடல் உறவு திறன் மையம்,

அதன் உணர்வுகள் - (ஜனனேந்திரியத் திறன்)

நிறம்  - ஆரஞ்சு

சுவாதிட்டமான சக்கரம்  பலவீனமாக, குறைபாடு உடையதாகவோ இருந்தால்  கற்பனை திறனும், படைப்புத்திறனும் குறையும். சுயநல எண்ணம் அதிகரிக்கும். பிறருடனான உறவுகள் பலவீனமாகும். எதையும் கற்றுக்கொள்ள கூடிய ஆர்வம் இருக்காது.

பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, மாம்பழம்  உண்ணலாம்.

ஆம்பர் கற்கள் அறியலாம்

ஆரஞ்சு நிற உடை உடுத்தலாம்.

தெளிவுரை:

               சுவாதிஷ்டானம் என்றால் தன்னுடைய அடி ஸ்தானம்  அதாவது சொந்த ஸ்தானம்  அல்லது தன்னுடைய இருப்பிடம். அகக்கரம் மனதில் அடங்கும் போது மனதின் செய்கைகள் அற்று அதன் சொந்த ஸ்தானத்தில் அடங்குகின்ற தருணம். மனம் முழு நிலையாகிறது. அதாவது நான் என்கிற  அகங்கார நிலைமை மனதில் சேரும்போது மனம் வெளியிலுள்ளவற்றை எல்லாம்  விட்டகன்று தன் சொந்த ஸ்தானத்தில் பிரவேசிக்கிறது. அப்போது மனதிற்கு யாதொரு பிரகாசமோ அறிவோ இல்லாமல் சுத்த இருளாக ஒன்றுமே அறியாமலிருக்கும்  நிலைமை உண்டாகிறது .இதுவே சுவாதிஷ்டானம்.


(03)
மணிபூரகம்

    நெருப்பு தத்துவம். சுவாதிஷ்டானத்திற்கு மேலே தொப்புளின் இடத்தில் பத்து இதழ் கமலம் நடுவில் பஞ்சாசரத்தின் ""  மூன்றாம் பிறை வடிவம்.

", 2, 3 ,4, , , 2, 3, 4, , , 2"  ஆகியவை ஒலிக்கும்.

வயிறு, கல்லிரல், மண்ணிரல், பித்தப்பையை சார்ந்தது. அட்ரினல் என்னும் நாளமில்லா சுரப்பி (இரத்தத்தில் சக்கரை அளவு உயர்த்துவது) ஆகியவை ஆடங்கும்.

வயிற்றின் உள்ளே இருக்கும் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம், வயிறு, குடல்கள் ஆகிய உறுப்புக்கள் மணிபூரகத்தின் சக்கரத்தின் ஆளுமையில் இயக்கப்படுகின்றன.

மணிபூர சக்கரம் வலுவாக இருக்கும் போது நுண்ணறிவு வளரும். நல்லதையும், தீயதையும், பகுத்துணர்ந்து அறியும் ஆற்றல்  வளரும். மனம் விட்டு பேச தூண்டும். கலகலப்பும் உற்சாகமும் இருக்கும்.

மணிபூரத்தில் குறைபாடுகள் இருந்தால் மேற்சொன்னவைகள் இல்லாமல் புதியவற்றை கற்கும் ஆவல் இல்லாமல் போகும். மனம் அலைபாயும். மந்தத்தன்மை இருக்கும். புத்தி கூர்மையும், நினைவாற்றல் குறைந்து காணப்படும்.

நிறம் - மஞ்சள் உடுத்தலாம்.

மக்காசோளம், பருப்பு வகைகள், எலுமிச்சை, வாழைப்பழம், சேர்க்கலாம்.

புஷ்பராகம் அணிகலன் அணியலாம்.

தெளிவுரை:

    மணிபூரகம் என்றால் மணி என்பது மனம் பூரகம் என்றால் நிறைதல், மனதை பூரித்தல். அப்போது மனம் வேறொன்றும் இல்லாமால்  ஜீவனுடன் தானாய் நிற்கின்றது. அப்போது அவ்விடம் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும். அச்சமயம் அவ்விடம் நல்ல சுகமான வெளிப்பட்டு காணவும், அறியவும் செய்கிறது. அது மனதின் ஜாக்கிரதை நிலையாகும்.


(04) அனாஹதம்

     வாயு - மணிபூரகத்திற்க்கு 10 விரற்கட்டை மேல் இதய மைய கமலம். 12 இதழ் முக்கோணம் நடுவில் பஞ்ச சக்கரம்.

நடுவில் "சி" எழுத்து. 12 இதழ் ஒலிக்கும். ", 2, 3, 4, க், , 2, 4, , , 2

தைமஸ் எண்டோக்ரைன் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில்.

இதயம், நுரையீரல், கல்லிரல், இரத்த சுழற்சி மண்டலம்.

அனாகதம்  இதயத்துடன் தொடர்பு உடையது என்பதால் இச்சக்கரம் வலுவு இழந்தால் எவரிடமும் அன்பு, பாசம், இல்லாத நிலை தோன்றும். எண்ணத்திற்கும் செயலுக்கும் ஞானம் இராது. தனக்குதானே ஒரு அரனை உருவாக்கி கொள்ளும் நிலை உருவாகும்.

நுண்கலைகளில் நாட்டம் உடையவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளார்கள், தங்கள் திறமையை நன்கு வளர்த்து கொள்ள வலுவுடையதாக இருத்தல் வேண்டும்.

பச்சை நிறம் சிறப்பு உடையது.

புதன் கிரகம் என்பதால் புதன் கிரகத்தின் அதிர்வு அலைகள் வெளிவரும் சக்தி அலைகளும் பெறக்கூடும்.

ஒவ்வாமைகளால் ஏற்படகூடிய ஆஷதுமா, சைனீஸ், நோய்கள் வராமல் தடுக்க  இதயம் வலுவடைய செய்யவும் மேலும் அன்பு, பாசம் உடையவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம்.

தெளிவுரை:

    அனா = அக்கினி, ஹதம் -நாசம். அதாவது அக்கினி சொருபமாகி பிரகாசிக்கின்ற மனம் தன் உற்பத்தி ஸ்தானமான ஜீவனில் லயமாகிறது. அப்போது ஜீவனுக்கு கனவாகிறது. எப்படி என்றால் பிரகாசமாகி இருக்கின்ற மனம்  ஜீவனில் லயித்தபோது அதுவரை இருந்த பிரகாசம்  இன்னதென்று  அறியமுடியாமல் கனவு போல் இருக்கும். இது ஜீவனுடைய கனவாகும். இதுவே அனாகதமென சொல்லப்படுகிறது.


(05)
விசுத்தி

    ஆகாயம் - அனாஹதத்திற்கு மேலே நெஞ்சுக்குழியில் உள்ளது. அறுகோணம்.16 இதழ்கமலம். அகரம் முதல் என்ற எழுத்து ஒலிக்கும்.

பஞ்ச சக்கரத்தில் "" என்ற எழுத்து.

தைராட் - தொண்டை - அதன் கீழ் பகுதி

பேச்சுத்திறன், கேக்கும் திறன் அறியும் திறன் தொடையில் உள்ள தசைகள், குரல் நாண்கள், காது நரம்புகள் ஆகியவை விசுத்தி சக்கரத்தின் ஆளுமையில் உள்ளது

விசுத்தி சக்கரத்தின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டால் தொண்டை நோய், டான்சில், மூச்சு இரைப்பு, படபடப்பு , தூக்கமின்மை, தைராயிட்டு, நமச்சல், அழற்சி, காமாலை, பால்வினை நோய்கள், தலைவலி, வழுக்கை, இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

கிழமை - வியாழகிழமை.

நீல நிறம் சிறப்பு உடையது.

உப்பு உணவுகள், பின்பலம் நல்லது.

தெளிவுரை:

         வி +சுத்தி, வி = விஷேசம், அதாவது அறிவு. சுத்தி =நிர்மலம்  அதாவது அறிவு நிர்மலமகிறது. அப்போது ஒன்றும் தெரியாமல் யாதொரு அறிவும் இல்லாமல் சலனமில்லாமல் ஜீவன் மட்டுமாய் இருக்கிற நிலைம. அது ஜீவனுடைய சுழுத்தி. அந்த ஜீவனிலிருந்து உற்பித்த மனதில் உண்டான எல்லா  கலக்கங்களும் நாசம் அடைந்து ஜீவனில் மனம் லயித்து ஜீவன் மட்டுமாய் ஒன்றும் அறியாமல் இருக்கின்ற நிலை ஜீவனின் சுழுத்தி. இதுவே விசுக்தியாகும்.


(06)
ஆக்ஞா சக்கரம்

    விசுக்திக்கு மேலே புருவமையம் இடத்தில் உள்ளது. அறைவட்ட மூன்றிதழ் கமலம் - மனோதத்துவம்.

", ஹா, " என்ற எழுத்து ஒலிக்கும் . நடுவில் "" எழுத்து.

மூளை மையத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி, ஜீவ அணுக்கள் பெருகும் இடம். உறுப்புகள் செயல் திறன் இரத்தம் மூச்சு குழல்)

இச்சக்கரம் மிக மிக உன்னதமான உயிர் நிலை சக்கரம் ஆகும். இதன் வலிமையில் தான் ஞானம் அடைகிறான். ஆற்றல் கலை மேலோங்க செய்வதில் இச்சக்கரம்  முதன்மை பெறுகிறது. இச்சக்கரத்தின் ஆளுமையால் உடலிலும், மனதிலும் ஏற்படக்கூடிய மாசுகள் அகற்றபடுகின்றன. மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் அகற்றப்படுகின்றன.

இச்சக்கரத்துக்கு மூன்றாவது கண் திறக்கும் போது முக்காலமும் அறியும் சக்தி பிறக்கிறது. எதிர்மறையான தீய விளைவுகளை தருகின்ற அனைத்தையும் எரிக்கின்ற  தன்மை கொண்டது.

நிறம் - இண்டிகோ (கரு நீலம்)

சனி கிரகம்

காய் கறி - கத்திரிகாய், நாவல்பழம், முட்டைகோசு

தெளிவுரை:

    ஜீவன் ஜீவனாய் உற்பத்தி ஸ்தானத்தில் ஆனந்தத்தில் லயித்து வேறொன்றும் இல்லாமால் ஆனந்த நிலையில் இருக்கிறது. இது ஜீவனின் ஜாக்கிரதையாகும். இதுவே ஆக்ஞை  சக்கரம் ஆகும்.


(06) சஹஸ்ராரம்

    இதைத்தவிர இன்னும் ஓன்று  உள்ளது. அது தலையாதது. அது தான் சஹஸ்ராரம். சஹஸ்ராரம் - பிரம்ம கமலத்தில் மூலாதாரத்திற்கு நேர் மேல் புருவமையத்திற்கு மேல் நடுவில் ஆயிரம் இதழ் விரிந்து உள்ளது.

இங்கு மேலான எழுத்து ஒலிக்கும். இந்த இடத்தில் நம் உயிர் நிலையான ஆன்மா கால் அங்குலம் அளவில் இருக்கிறது.

இதுவே அனைத்து சக்கரங்களுக்கும் தலைமை சக்கரம் ஆகும். இச்சக்கரத்தின் நிறம் ஊதா.

உயிர் உருவாகும்போது இந்த சக்கரத்தின் வழியாக உயிர் உள்ளே நுழைகிறது. அதே போல் இந்த சக்கரத்தின் வழியாக உயிர் வெளியேறினால் அந்த உயிருக்கு மறுபிறவி கிடையாது என்று திருமந்திரம் போன்ற ஞான நூல்கள் கூறுகின்றன.

பிறப்பில் இருந்து இறப்புவரை இச்சக்கரம் திறந்தே இருக்கிறது. பிற சக்கரத்தில் ஏற்படுகின்ற தடைகளோ தேக்கமோ வலிமை குன்றுவதோ இதற்கு ஏற்பட்டது. இச்சக்கரம் விரிய விரிய ஞான நிலை உருவாகும். ஞானம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து பெறப்படுவது. இதனை பெற்று தரும் இச்சக்கரம்  சகஸ்ரார சக்கரம்  என்று பெயர் பெற்றது.

இச்சக்கரத்தை தாண்டியவர்கள்   படைப்பாற்றல் கொண்டவர்களாக உருவாக முடியும்.

கிரகம் - கேது.

காய் - கத்தரிகாய், திராட்சை, நாவல், முட்டைகோசு

Post a Comment

Previous Post Next Post