யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.
எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள்.
யோகா என்பது பயிற்சி அல்ல,
உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது,
மூச்சைப்பிடித்துக் கொள்வது,
தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல.
எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம்.
அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.
Tags
அடிப்படை